தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் ரூ.268.58 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

10th Nov 2020 04:37 PM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டத்தில் ரூ.268.58 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளை முதல்வர் கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  

குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை குமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா பந்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து ரூ60.44 கோடி மதிப்பில் 36 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 153.92 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 21 பணிகளைத் தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 54.22 கோடி மதிப்பில் 2736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

நிகழ்ச்சியில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : TN CM Palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT