தமிழ்நாடு

அமெரிக்காவில் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக்குழுவில் தமிழ்ப்பெண்: ஸ்டாலின் வாழ்த்து

10th Nov 2020 06:58 PM

ADVERTISEMENT

 

சென்னை: அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவுள்ள ஜோ பைடன் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக்குழுவில் இடம்பெற்றுள்ள  தமிழ்ப்பெண்ணுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அந்த நாட்டில் கரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பேர் கொண்ட சிறப்பு மருத்தவக் குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக்குழுவில் தமிழகத்தின் ஈரோட்டினை பூர்விகமாகக் கொண்ட பெண் மருத்துவரான செலின் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிறப்பு மருத்துவக்குழுவில் இடம்பெற்றுள்ள  செலினுக்கு  ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள திரு. ஜோ பைடன் அவர்கள் கோவிட்-19 தடுப்பிற்கு அமைத்துள்ள தேசியப் பெருந்தொற்றுத் தடுப்பு அணியில் செலின் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்ப் பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தகைய முக்கியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

பணி சிறக்க வாழ்த்துகள்!’ என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT