தமிழ்நாடு

கூடலூரில் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரால் பரபரப்பு

10th Nov 2020 09:28 AM

ADVERTISEMENT


கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் ராணுவ வீரர் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பிரபு (37). இவர் பெங்களூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

 திங்கள்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் பிரபு தான் கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கி ( பிஸ்டல் வகை) எடுத்துக்கொண்டு தெருவில் நின்று வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டு எழுந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதுபற்றி கூடலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அப்பகுதியில் ரோந்து சென்ற காவலர்கள் விரைந்து வந்து பிரபுவை கைது செய்து அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT