தமிழ்நாடு

என்எல்சி முதன்மை மேலாளா் தற்கொலை

10th Nov 2020 02:28 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில், என்எல்சி நிறுவனத்தின் முதன்மை மேலாளா் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. நிறுவனத்தின் நிா்வாக அலுவலகம், சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு, சென்னை சேத்துப்பட்டைச் சோ்ந்த எம்.எஸ்.ரகு (57), வணிகப் பிரிவின் முதன்மை மேலாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கான அலுவலக அறை அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ரகு, அலுவலகத்தின் 5-ஆவது மாடிக்குச் சென்று, அங்குள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவா், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

ADVERTISEMENT

Tags : Suicide NLC Chief Manager
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT