தமிழ்நாடு

திண்டிவனத்தில் முந்திரி, பாதாம் பருப்புகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள்

10th Nov 2020 03:18 PM

ADVERTISEMENT

 

திண்டிவனத்தில் வீட்டில் திருட வந்த மர்ம நபர்கள் முந்திரி, பாதாம் பருப்புகளை திருடி சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் என்.கே. நகர், ஜாய்ஸ் பொன்னையா தெருவைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி வேம்பு. செல்வநாயகம் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முந்திரி, பாதாம்  உள்ளிட்டவைகளை வாங்கிவந்து மொத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில்  திங்கள் கிழமை  வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியூர் சென்று இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள்  இரவு வீட்டில் புகுந்து  திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் பணம் இல்லாததால் அவரது வீட்டில் வைத்து இருந்த 50 கிலோ முந்திரி பருப்பு, 5 கிலோ பாதாம், 5 கிலோ பிஸ்தா  பருப்பு ஆகியவற்றை  மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

ADVERTISEMENT

இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். பணத்தை திருட வந்த மர்ம நபர்கள் உடம்பைத் தேற்றிக் கொள்வதற்கு வசதியாக கிடைத்த பாதாம், முந்திரி திருடிச்சென்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT