தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு குறித்து நவ.12ல் முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

10th Nov 2020 02:18 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நவம்பர் 12 ஆம் தேதி முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார். வருகிற 12 ஆம் தேதி முதல்வருடன் ஆலோசித்த பிறகே ஆன்லைன் வகுப்புகள் அல்லது டிவி மூலம் கல்வி வழங்கப்படும்.

பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு யூனிபாஃர்ம், செருப்புகள் தயாராக உள்ளன.

ADVERTISEMENT

நடப்பு ஆண்டில் 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர் என்றார். 

Tags : school
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT