தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு புத்தாடைகள்

10th Nov 2020 04:16 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு, திருவாரூர் லயன்ஸ் சங்கம் சார்பில், தீபாவளியை முன்னிட்டு, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புத்தாடைகள் வழங்கப்பட்டது. 

திருவாருர் விளமல் அரிமா சங்க நிர்வாகியும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான எஸ்.குமார் தனது சொந்த முயற்சியால் ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள தீபாவளி புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி குடிதாங்கிச்சேரி மனோலயம் மளவர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. 

விழாவிற்கு, விளமல் அரிமா சங்கத் தலைவர் ஜி.பி.முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.வைத்திலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் ப.முருகையன் வரவேற்றார். ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புத்தாடைகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மகேஷ்குமார் வழங்கினார்.

ADVERTISEMENT

விழாவில், பொருளாளர் எஸ்.சுரேஷ்குமார், சாசனத் தலைவர் என்.முருகானந்தம், பி.நாகராஜ், லிம்கா மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிர்வாகி மு.மஹேஸ்வரி நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பயிற்சி ஆசிரியர்கள் பாபுராஜா, அனுராதா, செளமியா, மகேஸ்வரி மேலாளர்கள் சுரேஷ், வினோத் உள்ளிட்டோர் கவனித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT