தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா‌

10th Nov 2020 04:44 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி  அதிமுக உறுப்பினராகப்  பிரபு உள்ளார். இவர் அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், திங்கள்கிழமை உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் காய்ச்சலுடன் இருந்துவந்தார். அதனை அடுத்து அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன்‌ முடிவுகள் இரவு வெளியானது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரபு எம்எல்ஏ கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT