தமிழ்நாடு

உடல்நிலை பாதிக்கப்பட்டு கொடைக்கானல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு மாடு

10th Nov 2020 02:58 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த உடல்நிலை பாதிப்படைந்த காட்டு மாடால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கொடைக்கானலில் பொதுவாக வனப் பகுதிகளில் மட்டுமே காட்டு மாடுகள் வசித்து வரும் ஆனால் சமீப காலமாக கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடுகள் அதிகமாக உலா வருகின்றது. அவைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அதிகமாக வருகிறது.

அவ்வாறு உணவைத் தேடி வரும் போது சாலைகள் மற்றும் குப்பைத் தொட்டியில் கிடக்கும் உணவுகளையும் அதனுடன் சேர்த்து பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து உண்ணும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவற்றை உண்ணும் காட்டு மாடுகள் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் நகர்ப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள காட்டேஜ்களில் முகாமிட்டு இருப்பது வழக்கம் அப்போது அவற்றை விரட்டும் போது அவைகள் மிரண்டு ஓடும் அப்போது அவைகள் அப்பகுதிகளிலுள்ள பள்ளத்தில் விழுந்தும் அங்குள்ள கேட்டுகளை தாவும் போதும் காட்டு மாடுகளின் உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் காட்டு மாடுகள் வனப் பகுதிகளுக்குள் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் உடல் நிலை பாதிப்படைந்து கிடக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கொடைக்கானல் குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் உடல் நிலை பாதிப்படைந்து காட்டுமாடு ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கொடைக்கானல் வனத்துறையினர் மற்றும் மருத்துவர் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்நிலை பாதிப்படைந்த காட்டு மாட்டுக்குச் சிகிச்சை அளித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT