தமிழ்நாடு

கடலூர் திரையரங்கில் இலவச அனுமதி

10th Nov 2020 02:15 PM

ADVERTISEMENT

 

கரோனா பொது முடக்கத்திற்குப் பின்னர் இன்று தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டது. 

இதில் கடலூரில் ஜிஆர்கே குழுமம் நடத்தும் கிருஷ்ணாலயா தியேட்டரில் இலவச அனுமதி வழங்கப்பட்டது. இதுகுறித்து குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ் கூறுகையில்,

கரோனா பொதுமுடக்கத்தினால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையில் தியேட்டர் திறப்பு இருக்கும். ஆனால் போதிய வருமானம் இல்லாத மக்களுக்கு ஒரு ஆறுதல் வழங்கிட இலவசமாக அனுமதி வழங்குகிறோம். 

ADVERTISEMENT

தீபாவளி வரையில் தினமும் 4 காட்சிகள் அனுமதி வழங்கப்படுகிறது. பாதி இருக்கைகள் மட்டுமே 320 நிரப்பப்படுகிறது. குழந்தைகளுக்கு இலவசமாக பாப்கார்ன் வழங்குகிறோம். ஏன் இலவச அனுமதி என்று மற்ற திரையரங்க உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

தியேட்டருக்கு வரும் மக்களின் முகத்தில் தெரியும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதனை மற்ற தியேட்டர் உரிமையாளர்கள் உணர வேண்டும். இலவச அனுமதியாகவே இருந்தாலும் வெப்ப பரிசோதனை செய்தே அனுமதி வழங்கப்படுகிறது. 

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம் என்றார். தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்று திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT