தமிழ்நாடு

தீபாவளி: கோயம்பேட்டிலிருந்து 24 மணி நேரமும் சிறப்பு இணைப்புப் பேருந்துகள்

10th Nov 2020 12:41 PM

ADVERTISEMENT

 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 24 மணி நேரமும் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை நாளை நவம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை 3 நாள்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.

வரும் தீபாவளித் திருநாளினை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிட ஏதுவாக, சென்னையிலிருந்து 11.11.2020, 12.11.2020 மற்றும் 13.11.2020 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 9,510 பேருந்துகளில், 11ஆம் தேதி 2,225 பேருந்துகளும், 12ஆம் தேதி 3,705 பேருந்துகளும், 13ஆம் தேதி 3,580 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,247 பேருந்துகள் என ஆக மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்புப் பேருந்துகள் பின்வரும் 5 இடங்களிலிருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
2. தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்) மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்
3. பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் (கோயம்பேடு)
5. கே.கே. நகர் பேருந்து நிலையம்.

 

Tags : MTC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT