தமிழ்நாடு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,248 குறைந்தது!

10th Nov 2020 10:44 AM

ADVERTISEMENT

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,248 குறைந்து ரூ.38,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஓரிரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. 

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,248 குறைந்து ரூ.38,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 156 குறைந்து ரூ.4,766-க்கு விற்பனையாகிறது. 

அதேபோன்று, வெள்ளியின் விலை 4 ரூபாய் 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.90-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 66,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.  

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்(ரூபாயில்)

1 கிராம் தங்கம்............................. 4,766

1 சவரன் தங்கம்...............................38,128

1 கிராம் வெள்ளி.............................66.90

1 கிலோ வெள்ளி.............................66,900

திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்............................. 4,922

1 சவரன் தங்கம்............................... 39,376

1 கிராம் வெள்ளி............................. 71.00

1 கிலோ வெள்ளி............................. 71,000

Tags : gold rate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT