தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் பாஜகவினர் நாற்று நடும் போராட்டம்

10th Nov 2020 01:00 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

உத்தமபாளையத்தில் முதல் போடி வரையில் செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் உத்தமபாளையம் பேரூராட்சியில் கிராம சாவடி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாக சாலை காணப்பட்டு வந்தது. மிகவும் மோசமான இச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டனர். 

இதனை அடுத்து மாநில நெடுஞ்சாலைத் துறையை கண்டிக்கும் விதமாக குண்டும் குழியுமாக இருந்த சாலையில் பாஜகவினர் நெல் நாற்று நடும் போராட்டத்தை மேற்கொண்டனர். 

ADVERTISEMENT

இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் தெய்வம் தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்தி கண்டன உரையாற்றினார். 

நகர பொதுச்செயலாளர்கள் வாரணாசி ராமர், பிரேம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கராஜா மற்றும் பிரசாத், பழனிவேல், முத்துகிருஷ்ணன், முத்துக்கண்ணன், சிவராம் சாமிநாதன், செந்தில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT