தமிழ்நாடு

சீர்காழியில் ஊர்க்காவல் படையின் முன்னாள் பெண் காவலர் போராட்டம்

9th Nov 2020 04:53 PM

ADVERTISEMENT

 

சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து முன்னாள் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த  பெண் காவலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் லல்லி பாய். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த  சேகர், செல்வமணி, முருகானந்தம், பிரபாகரன் உள்ளிட்ட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் அவர்கள் மீது நவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த மாதம் 19-ம் தேதி கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாவிடம் புகார் கொடுத்துள்ளார். 

ADVERTISEMENT

இதுவரையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த காவல்துறையினர் சாலையில் அமர்ந்து போராடியவரை  இழுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் சாலையில் அமர்ந்து போராடியதால் சிதம்பரம் - சீர்காழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சீர்காழி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே முன்னாள் ஊர்க்காவல் படை பெண் காவலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT