தமிழ்நாடு

விபத்தில்லா தீபாவளி: ஊத்தங்கரையில் தீயணைப்புத் துறையின் விழிப்புணர்வு பேரணி

9th Nov 2020 03:49 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வருகிற தீபாவளியை பண்டிகையையொட்டி விபத்தில்லா தீபாவளியை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் சார்பில்  விழிப்புணர்வு பேரணி திங்கள் கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். ஊத்தங்கரை வட்டாட்சியர் தண்டபாணி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊத்தங்கரை நகர்ப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர். 

ஊர்வலத்தில், அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது. குழந்தைகளிடம் பட்டாசு கொடுக்கக் கூடாது. வீட்டில் வளர்ப்பு பிராணிகளான பூனை,நாய் போன்றவற்றின் உடல்களில் பட்டாசுகளை திணிக்கக் கூடாது. பேருந்து நிலையம்,கேஸ் குடோன், பெட்ரோல் நிலையங்கள் போன்ற பகுதி அருகே பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, வீடுகளில் பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் வாளியில் தண்ணீர் வைக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணியில் கோஷமிட்டு சென்றனர்.
 

ADVERTISEMENT

Tags : diwali
ADVERTISEMENT
ADVERTISEMENT