தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு

3rd Nov 2020 06:23 PM

ADVERTISEMENT

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்கும் புதிய பெயர் சேர்ப்பதற்கும் வாக்காளர் சிறப்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நவம்பர் 21, 22 டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளர்  சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வருகிற நவம்பர் 16 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டைப் பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

முன்னதாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT