தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்

1st Nov 2020 03:07 PM

ADVERTISEMENT

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு(72) சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை(அக்.31) இரவு காலமானார். 

அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், 

ADVERTISEMENT

'தமிழக வேளாண் அமைச்சர் திரு துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர், அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி!' என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT