தமிழ்நாடு

கரோனாவில் இருந்து குணமடைந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

1st Nov 2020 07:25 PM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினைச் சேர்ந்த சு.வெங்கடேசன் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் 22-ஆம் தேதி மதுரை அருகேயுள்ள தொப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

மருத்துவர்களின் தொடர் சிகிச்சை  மற்றும் கண்காணிப்பின் காரணமாக அவர் ஞாயிறன்று குணமடைந்து வீடு திரும்பினார்.

அவர் விரைவில் நலம்பெற வேண்டி மா.கம்யூ., உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT