தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,504 பேருக்கு கரோனா

1st Nov 2020 08:45 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,504 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 2,504 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,27,026 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 686 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 30 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,152 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,644 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,94,880 பேர் குணமடைந்துள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT