தமிழ்நாடு

மதுபாட்டிலை ஆசன வாயில் திணித்துக் கொண்ட இளைஞர்; அறுவை சிகிச்சை மூலமாக அகற்றம்

31st May 2020 05:07 PM

ADVERTISEMENT

 

நாகையைச் சேர்ந்த ஒருவர் போதையில் மதுபாட்டிலை தனது ஆசன வாயின் வழியாக செலுத்தியதன் விளைவாக பாட்டில் முழுவதும் வயிற்றுக்குள் சென்றுள்ளது.

நாகையை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி(29). மது அருந்தும் பழக்கம் கொண்ட இவர், கடந்த ஓரிரு நாள்களுக்கு தொடர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட மதுபோதையின் காரணமாக, பக்கிரிசாமி காலியான மதுபாட்டில் ஒன்றை தனது ஆசன வாய் வழியே செலுத்தியுள்ளார். இதில், முழு பாட்டிலும் அவரது வயிற்றுக்குள் சென்றுள்ளது.

இதனால், அவருக்கு வயிறு வீக்கமும், வலியும் அதிகரித்துள்ளது. தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தவர்கள் பக்கிரிசாமியை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

ADVERTISEMENT

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், பக்கிரிசாமியின் வயிற்றில் ஒரு பாட்டில் முழுமையாக சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையும், மலக்குடலை சுத்தம் செய்யும் இனிமா சிகிச்சையும் அளித்து, அவரது வயிற்றில் இருந்த பாட்டிலை அகற்றினர்.

Tags : Nagapattinam
ADVERTISEMENT
ADVERTISEMENT