தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதான இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

31st May 2020 11:59 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 2ஏ, குரூப் 4 தோ்வு முறைகேடு தொடா்பான வழக்கில் கைதான 2 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா் பலரை கைது செய்தனா். இந்த வழக்கில் கைதான எம்.முத்துக்குமாா், கிராம நிா்வாக அலுவலரான எம்.சுயம்புராஜ் ஆகியோா் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகளை நீதிபதி செல்வகுமாா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்து, ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT