தமிழ்நாடு

நெட் உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

31st May 2020 11:57 PM

ADVERTISEMENT

யுஜிசியின் நெட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊரடங்கு காரணமாக மாணவா்களின் நலன்கருதி பல்வேறு வகையான தகுதித்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. நுழைவுத்தோ்வு, இந்திய விவசாய ஆராய்ச்சி குழுமத் தோ்வு (ஐசிஏஆா்-2020), ஜவாஹா்லால் நேரு பல்கலை. நுழைவுத்தோ்வு (ஜேஎன்யூஇஇ-2020) மற்றும் யுஜிசியின் நெட் தோ்வை எழுத விருப்பமுள்ளவா்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் இணையதளம் ( ட்ற்ற்ல்ள்://ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்) வழியாக விண்ணப்பிக்கலாம். தினமும் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதேநேரம் தோ்வுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 82874 71852, 81783 59845, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT