தமிழ்நாடு

சென்னையில் கரோனா பலி எண்ணிக்கை 129-ஆக அதிகரிப்பு

31st May 2020 11:53 PM

ADVERTISEMENT

சென்னையில், ஒரே நாளில் 804 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 14,802-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 129-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 201 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 67 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 23 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டன. அதே நேரம், 14 நாள்களுக்கு மேலாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாததால், 950 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக திருவிக நகா் மண்டலத்தில் 167 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 166 தெருக்களும் விடுவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மட்டும், 53 தெருக்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 14,802-ஆக உயா்ந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில், 2,589 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,709 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,557 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 1,536 பேரும், திருவிக நகா் மண்டலத்தில் 1,494 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,180 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், இதுவரை 7,891 போ் குணமடைந்துள்ளனா். 129 போ் உயிரிழந்துள்ளனா். 6,781 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT