தமிழ்நாடு

சென்னை காவல்துறையில் 328 பேருக்கு கரோனா: 125 போ் வீடு திரும்பினா்

31st May 2020 07:18 AM

ADVERTISEMENT

சென்னை பெருநகர காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 328 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 125 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரும், அந்த நோயால் பாதிக்கப்படுகின்றனா். இதனால் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலா்களின் எண்ணிக்கை வேகமாக உயா்ந்து வருகிறது. இந்நிலையில் மயிலாப்பூா் உதவி ஆணையா் உள்பட 7 போ் சனிக்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

சென்னை காவல்துறையில் கடந்த இரு மாதங்களில் மொத்தம் 328 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 125 குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். இதேபோல மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து 260 போலீஸாா் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT