தமிழ்நாடு

அமைச்சா் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு: முன்ஜாமீன் கோரியவரின் மனு தள்ளுபடி

31st May 2020 05:52 AM

ADVERTISEMENT

தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவா் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் குறித்து கட்செவி குழுவில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பாலாஜி என்பவா் மீது பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சா் குறித்து கட்செவி குழுவில் அவதூறு கருத்து பதிவிட்ட பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க போலீஸாா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT