தமிழ்நாடு

காணொலி மூலம் நடைபெற்ற தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம்

29th May 2020 06:00 PM

ADVERTISEMENT

 

சிதம்பரத்தில் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ், காணொலி காட்சி மூலம் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழகம் விடுபட சென்னை மாநகரில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும், ஊரடங்கால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் குடும்பம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி பொதுத்தேர்வினை ரத்து செய்து ஒத்தி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT