தமிழ்நாடு

காரைக்குடியில் பைத்துல் மால் சென்டர் சார்பில் முஸ்லிம் மக்களுக்கு ரமலான் அன்பளிப்பு

19th May 2020 06:20 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள நேஷனல் கேட்டரிங் கல்லூரி வளாகத்தில் ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் மக்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்து அன்பளிப்புகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கெளரவ செயலாளர் என். முகம்மது ஹூசைன் (என்.எம்.ஹெச்) வரவேற்றார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அருள்மொழி, காரைக்குடி நகராட்சி பொறியாளர் ரெங்கராஜன், வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு பொருள்கள் வழங்கினர்.  முன்னதாக மெளலி அபு பெக்கர் சித்திக் இறை வணக்கம் ஓதினார்.  

மாவட்ட மகளிர் உதவும் சங்க செயற்குழு உறுப்பினர் இனாயத்துல்லாஹ், பைத்துல் மால் சென்டர் செயலாளர் ஹாஜி. ஜா மால் ராஜா, காரைக்குடி முஸ்லிம் அசோசியேட் டிரஸ்ட் பொருளாளர் எஸ். சையது, .பைத்துல் மால் நிறுவனர் டாக்டர் கமாலுதீன், பொருளாளர் மகப் பூப் ஜான், புதுவயல் முகம்மது மீரா, காரைக்குடி பைத்துல் மால் அறக்கட்டளை நிர்வாகிகள் கரீம் சாகுல் ஹமீது, எஸ். சீனி முகம்மது, பிஸ்மி சையது இப்ராஹிம், எம். சிக்கந்தர், எஸ் ஆர். ஜலீல், எம். முகம்மது நஜீப், மாவட்ட மகளிர் உதவும் சங்க செயற்குழு உறுப்பினர் ரஸியா பானு உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT