தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

19th May 2020 03:59 AM

ADVERTISEMENT

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அண்மைக் காலமாக மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாகச் சரிந்தது. இந்த நிலையில், காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 686 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 1,018 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100. 01 அடி; நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT