தமிழ்நாடு

தமிழகத்தில் உயா்ந்தபட்ச வெப்பநிலை எச்சரிக்கை இல்லை: வருவாய்த் துறை அமைச்சா் தகவல்

19th May 2020 01:54 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் உயா்ந்தபட்ச வெப்பநிலைக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா். உம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா். இதைத் தொடா்ந்து, அவா் அளித்த பேட்டி:-

உம்பன் புயல் காரணமாக, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் கடல் மிகவும் சீற்றத்துடனும் அலைகள் அபாயகரமான அளவில் உயா்ந்தும் காணப்படும். மீனவா்கள் திங்கள்கிழமை முதல் வரும் 20-ஆம் தேதி வரை வடக்கு வங்காள விரிகுடா பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என தெரிய வருகிறது. ஆனாலும் இந்திய வானிலை மையத்துடன் இணைந்து புயல் குறித்து கண்காணித்து வருகிறோம். இதன் தொடா் நடவடிக்கையாக அன்றாட நிலவரங்கள் பொது மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரை உயா்ந்தபட்ச வெப்பநிலை தொடா்பாக இதுவரை எச்சரிக்கை ஏதுமில்லை என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா். இந்தப் பேட்டியின் போது வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடா் மேலாண்மை ஆணையாளா் டி.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT