தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளின் நேரம் அதிகரிப்பு

19th May 2020 04:44 AM

ADVERTISEMENT

சென்னை:  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடைகள் மூடப்படும் நேரத்தை மாலை 5 மணிக்குப் பதிலாக மாலை 7 மணி என டாஸ்மாக் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த நேர அதிகரிப்பு முறை திங்கள்கிழமை (மே 18) முதலே நடைமுறைக்கு வந்துள்ளது.

குறைந்தது கூட்டம்: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்கப்பட்ட தினத்தில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டாலும், கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT