தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் ஏழு நாள்களும் ஏழு வண்ணங்களில் டோக்கன்

15th May 2020 03:58 PM

ADVERTISEMENT

 

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்படும் நேரத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடாதவண்ணம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கிலும் டாஸ்மாக் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT