தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த முடிவு

15th May 2020 06:58 PM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தை நெருக்குகிறது. மேலும், வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்ந பள்ளிகளிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT