சூலூர் அருகே காடாம்பாடியில் தமிழக முன்னாள் அமைச்சர் சே.மா வேலுச்சாமி 2,500 பேருக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று நோய்ப் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு மூலம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கைப் பாதிப்படைந்து காணப்படுகிறது. இதன் மூலம் தினக்கூலிக்குச் சென்று வருமானம் தேடும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு உதவும் வண்ணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், முன்னாள் கோவை மேயருமான சே.மா வேலுச்சாமி உதவிப் பொருள்கள் வழங்கினார். அரிசி, பருப்பு, எண்ணெய், சேமியா, ரவை காய்கறிகள் உள்ளிட்ட 1000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்புகளை சுமார் 2500 பேருக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காடாம்பாடி சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் நவமணி ராமசாமி காடாம்பாடி ஊராட்சி துணைத்தலைவர் அசோக் குமார், முன்னாள் தலைவர் ரங்கசாமி, திரளான அதிமுகவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.