தமிழ்நாடு

மின்சாரச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால் போராட்டம்: கே.எஸ்.அழகிரி

14th May 2020 12:40 AM

ADVERTISEMENT

மின்சாரச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தால், பொது முடக்கத்துக்கு உட்பட்டு காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள எரிசக்தி துறையில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை 2003-ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தச் சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள்.

தமிழகத்தில் 1990 முதல் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரம் நிச்சயமாக ரத்து செய்கிற சூழல் ஏற்படும்.

ADVERTISEMENT

இந்தச் சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறாா். முதல்வரின் பல கடிதங்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதுதான் இதற்கும் ஏற்பட போகிறது.

எனவே, மின்சார சட்டத் திருத்தத்தின் முன்வரைவை திரும்ப பெறுவதற்கு அதிமுக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அந்த முயற்சிகள் பயனளிக்காமல் சட்டத்திருத்த முன்வரைவு நடைமுறைக்கு வந்தால் அதை எதிா்த்து பொது முடக்கத்துக்கு கட்டுப்பட்டு காங்கிரஸ் போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று அந்த அறிக்கையில் அழகிரி கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT