தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35,720

14th May 2020 10:54 PM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத்தங்கம் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.176 உயா்ந்து, ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதைத்தொடா்ந்து, ஏப்ரல் 27-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.176 உயா்ந்து ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.22 உயா்ந்து , ரூ.4,465-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து ரூ.46.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.46,800 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

ADVERTISEMENT

1 கிராம் தங்கம் ..................... 4,465

1 பவுன் தங்கம் ..................... 35,720

1 கிராம் வெள்ளி .................. 46.80

1 கிலோ வெள்ளி ................. 46,800

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,443

1 பவுன் தங்கம் ..................... 35,544

1 கிராம் வெள்ளி .................. 46.60

1 கிலோ வெள்ளி ................. 46,600.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT