சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் சார்பில் பல்வேறு கூலித்தொழிலாளர்கள் 750 பேருக்கு அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் வியாழக்கிழமை நான்கு இடங்களில் வழங்கப்பட்டன.
கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு பொது முடக்கத்தையொட்டி கூலித்தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே உள்ளடங்கி உள்ளனர்.
இதனையடுத்து சங்ககிரி நகரச் செயலர் எல்ஐசி.சுப்ரமணி தலைமையில் கழுகுமேடு, வி.என்பாளையத்தில் 300 கூலித் தொழிலாளர்களுக்கும், சங்ககிரி நகர் கோட்டைத்தெருவில் மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமையில் 150 கூலித் தொழிலாளர்களுக்கும், காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி ஊராட்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா, வெங்கட்ராமன், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் 300 விவசாய கூலித்தொழிலாளர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை மாவட்டச் செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி வழங்கினார்.
ஒன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ், முன்னாள் பால்வளத்தலைவர் சின்னதம்பி, விவசாய அணி அமைப்பாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலர் பி.தங்கமுத்து, இளங்கோவன், நவீன்சங்கர், முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் செல்வராஜ், சண்முகம், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.என்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.