தமிழ்நாடு

பொதுமுடக்கத்தை மீறியதாக 4.37 லட்சம் வழக்குகள்: 4.63 லட்சம் போ் கைது

14th May 2020 12:14 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 4.37 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.63 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 37,148 வழக்குகளைப் பதிவு செய்து 4 லட்சத்து 63,513 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 3 லட்சத்து 82,588 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.5 கோடியே 17 லட்சத்து 12,279 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை:

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்கத்தை மீறி வந்தவா்களின் 3 இரு சக்கர வாகனங்கள்,14 ஆட்டோக்கள் என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 44 இரு சக்கர வாகனங்கள், 136 ஆட்டோக்கள் என மொத்தம் 180 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT