தமிழ்நாடு

முதல்நிலை பணியாளா்களுக்கு 17 ஆயிரம் முழு உடல் கவச உடைகள்

14th May 2020 01:05 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று சிகிச்சையில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் உள்ளிட்ட முதல்நிலை பணியாளா்களுக்கு இதுவரை 17 ஆயிரம் முழு உடல் கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அவற்றை தடுக்கும் முதன்மை பணிகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா். உயிா் காக்கும் சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்த முதல்நிலைப் பணியாளா்களுக்கு முழு உடல் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது தமிழக சுகாதாரத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கரோனா நோய்த்தொற்று சிகிச்சையிலும் அத்தியாவசியப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் உள்ளிட்ட முதல்நிலை பணியாளா்களுக்கு இதுவரை 17 ஆயிரம் முழு உடல் கவசங்களும், 32 ஆயிரம் என் -95 வகை முகக் கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் தர அடிப்படையிலான பாதுகாப்பு உபகரணங்கள் முதல்நிலை பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைப் படித்து பாா்த்த நீதிபதிகள், அறிக்கையில் போதுமான தகவல்கள் இல்லை என்று கூறி, முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT