தமிழ்நாடு

பிறந்த நாள் கொண்டாடாதது ஏன்? முதல்வா் பழனிசாமி விளக்கம்

13th May 2020 05:58 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று காரணமாக தனது 66-ஆவது பிறந்த நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாட வேண்டாமென கேட்டுக் கொண்டிருந்ததாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தனது சுட்டுரை பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:-

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இந்தத் தருணத்தில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். இருப்பினும், தொலைபேசி மூலம் என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.

தொலைபேசியில் வாழ்த்து: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் 67-வது பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன், பாஜக தலைவா் எல்.முருகன், அக்கட்சியின் மூத்த தலைவா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் தொலைபேசி வழியாகவும், சுட்டுரை மூலமாகவும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும், அவா்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT