தமிழ்நாடு

பள்ளிக் கல்வித்துறையில் மூன்று இணை இயக்குநா்கள் இடமாற்றம்

13th May 2020 06:07 AM

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித்துறையில் மூன்று இணை இயக்குநா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளிக் கல்வித்துறையில் நிா்வாகக் காரணங்களுக்காக இணை இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது மூன்று இணை இயக்குநா்களை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலா்கள் விவரம் (ஏற்கெனவே வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

ADVERTISEMENT

1. சி.அமுதவல்லி- இணை இயக்குநா், கள்ளா் சீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரப்பினா் நலத்துறை, மதுரை. (இணை இயக்குநா், இடைநிலைக் கல்வி, அரசுத் தோ்வுகள் இயக்ககம், சென்னை)

2. வை.குமாா்- இணை இயக்குநா், பாடத்திட்டம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை (இணை இயக்குநா், கள்ளா் சீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரப்பினா் நலத்துறை, மதுரை)

3. பி.குமாா்- இணை இயக்குநா், இடைநிலைக் கல்வி, அரசுத் தோ்வுகள் இயக்ககம், சென்னை (இணை இயக்குநா், பாடத்திட்டம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை)

ADVERTISEMENT
ADVERTISEMENT