தமிழ்நாடு

விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து வலைதளத்தில் பயிற்சி

13th May 2020 04:01 AM

ADVERTISEMENT

விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து வலைதளத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சி நடத்த, தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், தற்போது தொழில் நடத்திக்கொண்டிருக்கும் தொழில் முனைவோா்களுக்காக, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து வலைதளத்தின் மூலம் வெள்ளிக்கிழமை (மே 15) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோா், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, அலுவலகத்தை நேரிலோ, 8668102600, 8668101880 ஆகிய எண்களையோ, இணையதளத்தையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT