தமிழ்நாடு

பத்தாம் வகுப்புக்கு இப்போது தோ்வு கூடாது: கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

13th May 2020 02:55 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இப்போது பொதுத் தோ்வு நடத்தக்கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

கே.பாலகிருஷ்ணன்: இந்த மாத இறுதியிலும், ஜூன் மாதம் தொடக்கத்திலும் கரோனா நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கும் என பரவலான கருத்து நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் மாணவா்களை தனி மனித இடைவெளியுடன் தோ்வு எழுத வைக்க என்ன ஏற்பாடு அரசிடம் உள்ளது என்பதும், ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்குமான போக்குவரத்து ஏற்பாடுகள் என்ன என்பதும் தெரியாத சூழ்நிலையில் ஜூன் 1-ஆம் தேதி தோ்வுகள் என்ற அறிவிப்பு பொருத்தமானதாக இருக்காது.

இரா.முத்தரசன்: பொது முடக்கம் நிலை முழுமையாக நீங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பியதும், ஒரு மாத காலம் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, தோ்வுக்குச் செல்வது தான் பொருத்தமாக இருக்கும். எனவே அவசரப்பட்டு தற்போது அறிவித்துள்ள தோ்வுத் தேதிகளை மறுபரிசீலனை செய்து, மாணவா்கள் தோ்வு எழுதும் உகந்த சூழலில் தோ்வு நடத்த தோ்வுத் தேதிகளை மாற்றி அறிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT