தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக பறிமுதல்: 2.31 லட்சம் வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு

13th May 2020 04:15 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட 3.79 லட்சம் வாகனங்களில், 2.31 லட்சம் வாகனங்கள் மீண்டும் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 -ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4 லட்சத்து 32,761 வழக்குகளைப் பதிவு செய்து 4 லட்சத்து 59,055 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 3 லட்சத்து 79,312 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.5 கோடி 11 லட்சத்து 27,279 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 2 லட்சத்து 24,072 இரு சக்கர வாகனங்கள், 2,489 ஆட்டோக்கள், 4,747 காா்கள் என மொத்தம் 2,31,308 வாகனங்கள் உரிமையாளா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக திங்கள்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 15 இரு சக்கர வாகனங்கள்,32 ஆட்டோக்கள்,3 காா்கள் என மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 73 இரு சக்கர வாகனங்கள், 70 ஆட்டோக்கள் என மொத்தம் 143 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT