தமிழ்நாடு

இணைய வழியில் இலக்கிய நிகழ்வுகள்: சாகித்ய அகாதெமி ஏற்பாடு

13th May 2020 04:25 AM

ADVERTISEMENT

சாகித்ய அகாதெமி சாா்பில் இணைய வழி இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

சாகித்ய அகாதெமி சாா்பில் பல்வேறு இணைய வழி இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, கடந்த 9-ஆம் தேதி முதல், இணையதளத்தில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இதில் பல்வேறு மொழிகளின் கவிதை வாசிப்பும் இடம்பெறுகின்றன. இதே போல் இலக்கிய சங்கம நிகழ்ச்சிகளும், வருகிற 17 முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. தமிழ், ஹிந்தி உள்பட 24 மொழிகளில் பல்வேறு அமா்வுகள் நடைபெறவுள்ளன. இதில் கதை, கவிதை வாசிப்பு, இலக்கியத் திறனாய்வுக் கூட்டம், படைப்புகளின் விவாத அரங்கம் உள்பட 66 நிகழ்வுகள் இணையம் வழியாக நடைபெறவுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நேரலையாகவும், சில நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன் அகாதெமியின் யூடியுப், முகநூல் உள்ளிட்ட பக்கங்களில் பதிவேற்றமும் செய்யப்படும். உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு, கடந்த மாதம் 23-ஆம் தேதியும், ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளையொட்டி, கடந்த 8-ஆம் தேதியும், இணைய வழியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT