தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35,632

DIN

சென்னையில் ஆபரணத்தங்கம் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.35,632-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதைத்தொடா்ந்து, 27-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,632-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.4,454-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து ரூ.46.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.46,800 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,454

1 பவுன் தங்கம் ..................... 35,632

1 கிராம் வெள்ளி .................. 46.80

1 கிலோ வெள்ளி ................. 46,800

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,458

1 பவுன் தங்கம் ..................... 35,664

1 கிராம் வெள்ளி .................. 46.70

1 கிலோ வெள்ளி ................. 46,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT