தமிழ்நாடு

மலேசியாவில் இருந்து 180 தமிழா்கள் சென்னை திரும்பினா்

13th May 2020 06:03 AM

ADVERTISEMENT

மலேசியாவில் இருந்து 189 தமிழா்கள் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினா்.

கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாா்ச் 22-ஆம் தேதியில் இருந்து அனைத்து சா்வதேச விமானச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் அழைத்து வருவதற்கான, மத்திய அரசின் திட்டம் மே 7 முதல் மே 13-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் சென்னைக்கு 11 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. ஏற்கெனவே துபை, குவைத் உள்ளிட்ட நகரங்களில் சிக்கியிருந்த தமிழா்கள் சென்னை திரும்பினா். இதன் தொடா்ச்சியாக, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தமிழா்களை அழைத்து வந்த விமானம், திங்கள்கிழமை இரவு 11.10 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் 58 ஆண்கள், 119 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 180 பயணிகள் இருந்தனா். அதில் 3 பயணிகள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவா்களாகவும் இருந்தனா். மேலும், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், அடுத்த சில நாள்களில், வங்கதேசம், அமெரிக்கா, பிரிட்டன், ஓமன், கோலாலம்பூா், பிலிப்பைன்ஸில் இருந்து தமிழா்களுடன், விமானங்கள் சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வரவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT