தமிழ்நாடு

சிறுமியின் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்: ஸ்டாலின்

11th May 2020 01:59 PM

ADVERTISEMENT

சிறுமியின் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் சிறு மதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ(14) (10ஆம் வகுப்பு சிறுமி). ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த இவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த இருவா் தன்னை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தாா்.

இதையடுத்து அதிமுக பிரமுகர் முருகன், கலியபெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்தார். சிறுமியின் குடும்பத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், விழுப்புரம் சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்கும். சிறுமியின் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படி செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி இதுபோன்ற சிறுமி, பெண்களை காப்பாற்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Tags : DMK stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT