தமிழ்நாடு

மும்பையிலிருந்து திரும்பிய தமிழர்கள் காரைக்குடி அருகே மருத்துவக் கண்காணிப்பில் தங்கவைப்பு

11th May 2020 04:54 PM

ADVERTISEMENT

 

மும்பை தாராவியில் வசித்த சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காரைக்குடி அருகே மருத்துவ கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி தேசிய ஊரடங்கு மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியதால் மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். 

இதனை அறிந்த அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் பிஆர். செந்தில்நாதன் 2 பேருந்துகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டு காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதூரில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவ வார்டு அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT