தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவ மாணவியருக்கு, ஆசிரியர்கள் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

11th May 2020 02:52 PM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியரின் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் நிவாரண உதவிகளை திங்கள்கிழமை வழங்கினர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சியில் உள்ள கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 41 ஏழை எளிய மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். 

இவர்களின் பெற்றோர் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் கூலி செய்து வருகிறார்கள். தற்போது முழு முடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதரம் இழந்து பாதிக்கப்பட்டிருந்தார்கள். இது குறித்து அறிந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் குடும்பத்தற்கு உதவி செய்ய முடிவு செய்தனர்.

அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களை வாங்கிக் கொடுத்தனர். ஊராட்சி மன்றத் தலைவி சுபிதா மாயக்கிருஷ்ணன் தனது பங்களிப்பாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.200 வழங்கினார். நிவாரண உதவிகளை ஊராட்சி மன்றத் தலைவி சபிதா மாயக்கிருஷ்ணன் தலைமையில், தலைமை ஆசிரியர் க.ஸ்ரீதர் முன்னிலையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பெ.ஜெயக்குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியை சுப்புலட்சுமி, இடைநிலை ஆசிரியைகள் ஆனந்தவள்ளி, ராமஜோதி ஆவுடையம்மாள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT