தமிழ்நாடு

மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

11th May 2020 11:17 AM

ADVERTISEMENT

மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவா் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இரவு 8.45 மணிக்கு அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

அங்கு இதய நோய் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ நிபுணா் நிதீஷ் நாயக் அவருக்கு சிகிச்சை அளித்தாா். மன்மோகன் சிங் தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில், முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்கள் விரைந்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன். இதுபோன்ற நேரத்தில், டாக்டர். மன்மோகன் சிங் அவர்களது சேவை நமது நாட்டுக்குத் தேவை. அவர் விரைவில் முழு உடநலன் பெறுவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT
ADVERTISEMENT